ஏமனில் பயங்கர சாலை விபத்து – 8 பயணிகள் உயிரிழப்பு

வளைகுடா நாடான ஏமன் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர்.

 

கிளச்சியாளர்களால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் உள்நாட்டு போர் நிலவுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏமன் அரசும், அரசு ஆதரவு படைகளும், நீண்ட போரில் ஈடுபட்டு வருகின்றன.

 

ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறைவால் ஏமனின் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளன. அங்கு அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

 

இந்நிலையில், அல்பேடா என்ற இடத்தில், பயணிகள் பஸ் ஒன்றும், லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இந்த பயங்கர விபத்தில், 8 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்து உள்ளனர்.


Leave a Reply