ஐ.டி. துறையில் ஆட்குறைப்பை தவிர்க்க முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள்

தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆட்குறைப்பை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

 

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில், தகவல் தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சி, சென்னையை அடுத்த நந்தம்பாக்கத்தில், இன்று தொடங்கியது. இக்கண்காட்சியை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

 

விழாவில் முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், அதிக அளவில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் 6 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளோம்.

 

கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி முதலீடு கிடைத்துள்ளது. 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

 

தகவல் தொழில்நுட்பத்துறையில், ஆட்குறைப்பு செய்யக்கூடாது. இதை தவிர்ப்பது தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்க வேண்டும். மாநில தகவல் குடும்ப தொகுப்பு விரைவில் உருவாக்கப்படும் என்றார்.

 

காக்னிஸாண்ட், இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கி உள்ள நிலையில், அதை தவிர்க்க வேண்டும் என்று, இம்மாநாட்டில், முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply