கோவையில், பள்ளிக் குழந்தைகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
கோவையில், கடந்த 2010 ஆம் ஆண்டு, பள்ளிக்கு சென்ற சிறுமியை காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அவரையும் அவரது தம்பியையும் கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் மோகன்ராஜ், போலீசாரின் பிடியில் இருந்து தப்பி சென்றபோது, சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் கைதான மனோகரனுக்கு, கோவை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை, ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி, மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை வழக்கில், குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனையை இன்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.