--- --:--:-- --

இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை!

5

திருநெல்வேலியில் நடிகை திரிஷாவை முன்னிறுத்தி “இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை” என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த ராஜகோபால் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு இந்தப் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.பேரவையின் தொடக்க நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவுக்கு “இளைய புரட்சித்தலைவி” என்ற பட்டத்தை நிர்வாகிகள் வழங்கினர்.

 

 

பச்சை நிற பட்டுடுத்தி வணக்கம் செலுத்துவது போன்று திரிஷா படத்தைக் கொண்ட இலட்சினையும் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு மிகப்பெரிய ஆளுமையும், சக்தியும் கொண்டவராக நடிகை திரிஷா திகழ்வதாக பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேலும், தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், திரிஷாவும் அவருடன் இணைந்து செயல்பட்டால் தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

 

இந்தப் பேரவையின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் கூறுகையில், பணத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தங்களது அமைப்பு உண்மையான சமூக சேவையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி, சட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நடிகை திரிஷாவை முன்னிறுத்தி அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்காகத் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பேரவை, அடுத்தகட்டமாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon