போட்டுக் கொடுத்த வார்டனை போட்டுத்தள்ளிய மாணவன்- துறையூரில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தனியார் கல்லூரி விடுதி வார்டனை, மாணவர் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
துறையூர் அருகே, கண்ணனூரில் தனியார் வேளாண் கல்லூரி உள்ளது. இங்கு, பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கட்ராமன், 45 வார்டனாக உள்ளார். இரண்டாம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவர் ஒருவர் சரியாக படிக்கவில்லை என்று, அவரது பெற்றோரிடம் வார்டன் வெங்கட்ராமன் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன், வார்டன் அறைக்கு சென்று அங்கிருந்த வெங்கட்ராமனை கழுத்திலும் இடுப்பிலும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் வெங்கட்ராமன் உயிரிழந்தார்
தகவல் அறிந்து வந்த ஜம்புநாதபுரம் போலீசார், மாணவனை கைது செய்தனர். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




