சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அருகே டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழந்த நிலையில் இதற்கு மேலும் உயிர்கள் பறிபோகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறுகின்றனர் பெண்ணின் உறவினர்கள். பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த லாவண்யாவிற்கு வயது இருபது தான்.
பட்டப் படிப்பு முடித்த கையோடு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த லாவண்யா சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவர் பணிபுரிந்த மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் நட்டு வளர்த்த செடி மரமாகி நிற்கும் நிலையில் வாழவேண்டிய மகளை பறிகொடுத்த நிற்கிறது இந்த குடும்பம்.
காட்டுப்பாக்கம் பகுதியில் அதிகளவில் மழை நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் அதிகளவில் உருவாவதே டெங்கு பாதிப்புகளுக்கு காரணம் எனக் கூறும் பொது மக்கள், ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் சில இடங்களில் மட்டும் அபராதம் விதித்து விட்டு செல்வதாகவும் இப்பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.