--- --:--:-- --

செய்திகளை வரைமுறைப்படுத்த தனி குழு அமைப்பு

21

செய்திகளை வரைமுறை படுத்துவது மற்றும் ஊடகத் துறையை நிர்வகிப்பது தொடர்பாக தனி அமைப்பை உருவாக்க செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில்மும்பையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய மற்றும் மாநில அளவிலான 30க்கும் மேற்பட்ட செய்தி ஊடகங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

இந்த கூட்டத்தில் செய்திகளை வரை முறைப்படுத்துவது தொடர்பாக பிரத்யேக குழுவை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதில் இந்தியா முழுவதிலும் உள்ள தொலைக்காட்சி பிரதிநிதிகளைக் கொண்ட இந்த குழு உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் தலைமையகம் தலைநகர் டெல்லியில் இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon