மகாராஷ்டிரா: சுழற்சி முறையில் முதல்வர் பதவி – சிவசேனா வலியுறுத்தல்

மகாராஷ்டிராவில் ஆட்சியில் சரி பாதி பங்கு தருவதாக பாரதிய ஜனதா வாக்குறுதி அளிக்க வில்லை என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பதால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

 

மகாராஷ்டிராவில் புதிதாக ஆட்சி அமைந்ததும் கடந்த முறையை விட தற்போது ஆட்சியில் அதிகப் பங்கு வேண்டும் என வலியுறுத்தியதாகவும், ஆனால் அதை பாரதிய ஜனதா தற்போது மறுத்து வருவதால் உத்தவ் தாக்கரே மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

உத்தவ் தாக்கரே தன்னுடைய மகன் ஆதித்யா தாக்கரே முதலமைச்சர் பதவியில் அமர வைக்க விருப்பம் தெரிவித்ததாகவும் இதற்காக சுழற்சி முறையிலான ஆட்சிக்கு எழுத்துப் பூர்வமான ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதாவுடன் அவர் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதா ஒப்புதல் அளிக்காததால் அங்கு புதிய அரசு அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.


Leave a Reply