குழந்தை சுற்றித் மீட்கப்பட வேண்டும் என ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வேதனையை தெரிவித்து இருக்கிறார். அதில் பூமித்தாயே எந்தவித சேதாரமுமின்றி குழந்தை சுஜித்தை தந்துவிடுமா என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான தமிழர்களின் கவலைதோய்ந்த கவனம் நடுக்காட்டு பட்டியை நோக்கி இருக்கிறது. குழந்தை அடைந்திருக்கும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கற்பனை செய்யவே முடியவில்லை என வைகோ வேதனை தெரிவித்துள்ளார். இப்படி ஒரு துன்பம் கொடுமை 2 வயது குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது தாங்க முடியாத துயரத்தை கொடுத்திருக்கிறது என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் மூன்று நாளாக மீட்பு பணியில் கவலையுடன் கடமையாற்றுகின்றனர். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் சுஜித்தை மீட்க இவ்வளவு போராட்டம் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்த அவர், பூமித்தாயே எந்த சேதாரமும் இன்றி குழந்தையை தடுத்துவிடம்மா என்று வைகோ வேதனையுடன் தெரிவித்துள்ளார்.