பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித கோவிலான கர்தார்பூர் கோவிலுக்கு சாலை மார்க்கமாக செல்லும் திட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இதன்மூலம் இந்தியாவிலிருந்து விசா இல்லாமலேயே சீக்கியர்கள் கர்தார்பூர் என்ற இடத்திற்கு புனித பயணத்தை மேற்கொள்ள முடியும் இந்தியாவின் பஞ்சாப் ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையில் கர்தார்பூர் பகுதி அமைந்துள்ளது.
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குருநானக் தமது கடைசிக் காலத்தை இந்த கர்தார்பூர் பகுதியில்தான் கழித்ததாகவும் பின்னர் அங்கேயே மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது நினைவாக அந்த சீக்கியர்களின் புனித தலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சீக்கியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கர்தார்பூர் குருத்வாரா சென்று வழிபடுவது அவர்களின் புனித கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதிகளில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த புனித தலமாக கருதப்படும் கர்தார்பூர் குறித்து இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி புனித பயணம் மேற்கொள்ள வசதியாக இந்தியாவின் குருதாஸ்பூர் பாகிஸ்தானில் உள்ள கருதாபூரையும் இணைக்கும் வகையில் சாலை மார்க்கமாக வழித்தடம் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.
கடந்த 2018ம் ஆண்டு இந்திய பகுதிகள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கானும் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். இந்த வலைத்தளத்தின் மூலமாக இந்தியாவில் இருக்கும் சீக்கியர்கள் விசா இல்லாமலேயே பாகிஸ்தானில் உள்ள தங்களது புதிய தளத்திற்கு சென்று வரமுடியும் அதற்கான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர.வரும் நவம்பர் 9ஆம் தேதி முதல் இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இருந்து ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5000 பேர் விசா இல்லாமல் தங்களது புனித பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்து காலையில் பாகிஸ்தானுக்கு சென்று தங்களது புனித பயணத்தை முடித்து விட்டு அன்று மாலையே நாடு திரும்பும் அளவிற்கு சாலை மார்க்கமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையே கையெழுத்தாகியுள்ளது.
கர்தார்பூர் சாலை வழி திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் இந்த சாலை வழியாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்கு தல ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்திருந்தது. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் கர்தார்பூர் வழித்தட திட்டத்திற்கு இரு நாட்டு அதிகாரிகளும் தற்பொழுது கையெழுத்திட்டன.
மேலும் இந்த வலைத்தளம் மூலமாக பாகிஸ்தான் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 250 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று பாகிஸ்தான் தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. சீக்கிய மத குருவான குருநானக் 150-ஆவது பிறந்த தினம் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது எனவே சீக்கியர்கள் பலரும் ஓராண்டு முழுக்க கர்தார்பூர் யாத்திரை மேற் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.