தீபாவளி பட்டாசு எப்போது வெடிக்கலாம்..? காலை 6 to 7, மாலை 7 to 8 மணி வரை மட்டுமே அனுமதி..!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

 

தீபாவளி என்றாலே புத்தாடை,இனிப்பு, பலகாரம் என்பதைத் தாண்டி முக்கிய இடம் பிடிப்பது பட்டாசுகள் தான். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை விதவிதமான பட்டாசுகளை வெடித்து மகிழ்வது வழக்கம். கடந்தாண்டுக்கு முன்பு தீபாவளிக்கு முந்தைய சில நாட்கள் முதலே நேரம் காலம் பார்க்காமல் வெடிச்சத்தம் கேட்பது வழக்கமாக இருந்து வந்தது.

பட்டாசுகளால் காற்று மாசுபடுகிறது. ஒலி மாசும் அதிகரிக்கிறது என்ற புகார்கள் எழ, பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் தடை போட்டது. இதனால் பட்டாசுப் பிரியர்கள் ஏமாற்றமடைந்தார்களோ இல்லையோ, பட்டாசுத் தொழில் ஒன்றையே நம்பியிருந்த சிவகாசி மக்கள் ஆடிப் போயினர். இதன் பின்னர் பட்டாசு உற்பத்தியாளர்களின் தொடர் முறையீடுகளுக்குப் பின்னர், தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கடுமையான நிபந்தனைகளை விதித்து, தடையை தளர்த்தியது உச்ச நீதிமன்றம் .

 

இதனால் கடந்தாண்டு தீபாவளி அன்று காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதே போன்ற இந்தாண்டும் தீபாவளிக்கு காலை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Leave a Reply