விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதேநேரம் நாங்குநேரியில் கடந்த முறையை விட இம்முறை குறைவான வாக்குகள் பதிவாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வாக்குபதிவு நிறைவடைந்த பிறகு சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் வாக்கு எண்ணிக்கை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக கூறினார்.