திருவாடானை அருகே திருச்சி-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளால் விவசாயம் இப்பகுதியில் பெரும் பாதிப்பு எனவும் சரி செய்ய கோரிக்கை வைத்தார்கள்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை வழியாக திருச்சி-இராமேஸ்வரம் சாலை விரிவாக்கம் தேவகோட்டை ரஸ்தாவில் இருந்து தேவிப்பட்டிணம் வரை நடந்து வருகிறது. குறிப்பாக கோவனி, பாரூர் சின்னகீரமங்கலம், கற்காத்தகுடி செலுகை பகுதிகளில் பாலங்கள் வேலை மடிந்தும் அந்த மணலை மலை போல் குவித்து வைத்திருப்பதால் பாலங்களில் செல்லவேண்டிய தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடப்பதால் பயிர்கள் அழுகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
அதனால் தங்களது வாழ்வாதாரமே கேள்வி குறியாக மாறிவிட்டதாகவும் கூறுகிறார்கள். எனவே இந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த காரர்கள் விவசாய காலத்தில் விவசாயிகளுக்கு ஏதுவாக மண்குவியலை அகற்றி தர இப்பகுதி விவசாய மக்கள் கோரிக்கை வைத்தார்கள்.