மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய மாணவர்கள்!

ஆபாச படம் எடுத்து மிரட்டி பள்ளி மாணவியை சீரழித்து உள்ளனர் கல்லூரி மாணவர்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவியும் அந்த கிராமத்தை சேர்ந்த விஷ்வா என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் அந்த மாணவியுடன் நெருக்கமாக இருப்பது போன்று தனது செல்போனில் படம் எடுத்து அதனை தனது நண்பர்கள் மதியரசன், அருண்பாண்டி ஆகாஷ் ஆகியோரின் செல்போன்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். அந்த மூன்று பேரும் தனித்தனியாக அந்த படங்களை மாணவியிடம் காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.

 

மேலும் அந்த மாணவியை ஆபாசமாக படம் எடுத்து அதனை மற்றவர்களின் செல்போன்களுக்கும் அனுப்பியுள்ளனர். அவர்கள் 3 பேரும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்ததால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் தாயார் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைவிட கொடுமை செய்த ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நான்கு பேரில் இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட சிறுமியை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இன்றைய செல்போன் யுகத்தில் பெற்றோர் தங்களது பெண் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்தஸ்தை காட்டும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு விலை உயர்ந்த செல்போன்களை வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் அல்லது நண்பர்களிடமோ உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

 

இதனால் பிரச்சனைகளை சரி செய்ய வழி ஏற்படும் என்றும் காலம் கடந்தால் பாதிப்புகள் பெரியதாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.


Leave a Reply