சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கொடிய பாம்புகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வந்த கொடிய பாம்புகள் உடும்புகள் மற்றும் மர பள்ளிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது சிவகங்கையை சேர்ந்த முகமது அக்பர் ஆகிய இருவரும் தாங்கள் எடுத்த குடைக்குள் பெரிய பாம்புகள் மற்றும் உடும்புகள் மர பள்ளிகளை கடத்தி வந்துள்ளனர்.

இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் கொண்டுவந்த உயிரினங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்கியல் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி அதிகாரிகள் பறிமுதல் செய்த கொடிய பாம்புகள் உடம்புகளை மீட்டு மலேசியாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.


Leave a Reply