முட்புதருக்குள் பதுங்கி இருந்த 2 முதலை!

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் முட்புதருக்குள் பதுங்கியிருந்த 2 முதலைகளை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். முக்கொம்பு அருகே உள்ள ஒரு பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் பொக்லைன் எந்திரத்தை வைத்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகே இருந்த முட்புதரில் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீளம் கொண்ட இரண்டு முதலைகள் தென்பட்டன. தகவலறிந்து வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி முதலைகளை பிடித்தனர்.


Leave a Reply