சீன அதிபர் தமிழகம் வருவதையொட்டி சென்னையில் இருக்கும் தங்கும் விடுதிகளில் ஏற்பட்ட சோதனைகளில் போதை மாத்திரை விற்பனை கும்பல் சிக்கியுள்ளது. திருவேங்கடம் தெருவில் இருக்கும் தனியார் விடுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அறை ஒன்றில் தங்கியிருந்த கிஷோர் பாபு டானியல் அரவிந்த் ஆகியோர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர் இந்த கும்பல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களுக்கு விற்பனை செய்து வந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.