ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் உதவியால் உயிர் காக்கப்பட்ட இரட்டை குழந்தைகள்!

சேலத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் கடின முயற்சியால் பிறந்து சில மணி நேரமே ஆன இரட்டைக் குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் வசந்தி என்பவருக்கு ஆண் பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. சிறிது நேரத்தில் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குழந்தைகளை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக நவீன வசதிகள் கொண்ட ஆம்பளை சேலத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து மேட்டூர் பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் ஓட்டுநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அவர்கள் குழந்தைகள் இருந்த ஆம்புலன்சுக்கு முன்பாக 3 அவசர ஊர்திகளை அனுப்பி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் இரட்டை குழந்தைகளும் தாயும் அரைமணிநேரத்தில் மேட்டூரிலிருந்து சேலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


Leave a Reply