நகைக்கடை உரிமையாளர்களை அழைத்து காவல்துறையினர் அறிவுரை

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி தங்க நகை கடையில் நிகழ்ந்த கொலை சம்பவத்தை அடுத்து சென்னை புறநகர் பகுதியில் நகைக்கடை கொள்ளையை தடுக்க காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமலை காவல் சட்டத்துக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பரங்கிமலை, ஆலந்தூர், பள்ளிக்கரணை, மேளவாக்கம், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நகைக் கடை உரிமையாளர்களை நேரில் அழைத்து பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் சில அறிவுரைகளை வழங்கினார்.

 

குறிப்பாக கடையில் உட்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் சில கேமராக்கள் மற்றவர்களின் கண்ணில் படாதவாறு அமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கடையில் பணியாற்றும் ஊழியர்களின் பின்னணி தகவல்களை தெரிந்து பணியில் அமர்த்த வேண்டும் என்றும் பண்டிகை காலங்களில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நகைக்கடை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


Leave a Reply