நாடு முழுவதும் சிறுபான்மை இன மக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கும்பல் படுகொலைகளுக்கு உடந்தையாக பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்டோர் சினிமா கலை இலக்கியம் அறிவியல் துறைகளை சேர்ந்த 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை கடந்த ஜூலை மாதம் எழுதியிருந்தனர். குறிப்பாக இந்த கடிதத்தில் பீகார் உத்தரப் பிரதேசம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மையின மக்களை ஜெய்ஸ்ரீராம் எனக்கூறி கோஷமிட வலியுறுத்தி நடைபெறும் தாக்குதல்களை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற செயல்களில் இந்து மத அடிப்படைவாதிகளை ஈடுபடுகின்றனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. படுகொலைகளை எதிர்த்து பிரதமர் ஆகிய நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறீர்கள். ஆனால் இதுவரை அதன் மீது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டது ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடு இந்திய நாட்டிற்கு எதிரான நிலைப்பாடு ஆகாது என்றும் எதிர் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பொதுவெளியில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே உறுதியான தேசமாக உருவாக்க முடியும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த கடிதம் குறித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு பீகாரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் மனுவை கொடுத்திருந்தார். புகார் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி மணிரத்தினம் உள்பட 49 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து பீகாரில் உள்ள சர்தார் காவல் நிலையத்தில் 49 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பிரபலங்கள் எழுதிய இந்த கடிதம் பிரதமர் மோடியின் மரியாதையை குறைக்கும் விதமாகவும் பிரிவினையை தூண்டும் விதமாகவும் இருப்பதால் இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 49 பேர் மீதும் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

அமைதியான சூழலை சீர்குலைப்பது போல நடந்து கொள்வது மத உணர்வுகளை காயப்படுத்துதல் தவறான பரப்புரைகளை செய்து பொது நலனுக்கு குந்தகம் விளைவிப்பது உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக பார்க்கப்படும். இந்த தேசத்துரோக வழக்கு பல கண்டனக் குரல்களை கிளப்பியுள்ளது பிரதமருக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள். ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன என்று இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அதோடு நல்ல நோக்கிற்காக எழுதப்பட்ட இந்த கடிதத்திற்கு எதிராக தேசத் துரோக வழக்கு போடுவது கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் ராகுல்காந்தி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.






