10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது

விழுப்புரம் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரை போலீசார் தேடி கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி காணவில்லையென அச்சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மகேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சிறுமியின் குடும்பத்தார் மீதான முன்விரோதம் காரணமாக பழிவாங்கவே இந்த செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply