ட்ராபிக் ராமசாமி திரைப்படத்திற்கு தமிழ்நாடு வெளியீட்டு உரிமம் அளிப்பதாக கூறி 21 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுப்ரமணியம் என்பவர் சார்பாக அவரது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான மணிமாறன் என்பவர் சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மணிமாறன் டிராபிக் ராமசாமி திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை அழிப்பதாக கூறி கடந்த 2011ஆம் ஆண்டு தனது நண்பரிடம் எஸ்ஏ சந்திரசேகர் 21 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதாகவும் அதன்பின் உரிமையை வழங்காமல் ஏமாற்றியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக சந்திரசேகரிடம் கேட்டபோது பணத்தை திருப்பி அளிக்க முடியாது எனக் கூறுவதோடு தமக்கும் தனது நண்பரான பிரபந்தம் சுப்பிரமணியத்திடம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மணிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே தங்களுக்கு உரிய பாதுகாப்பு காவல்துறை அளிக்க வேண்டும் என, தனது நண்பரின் பணத்தை மீட்டு தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மணிமாறன் வேண்டுகோள் விடுத்தார்.






