அழுகிய உணவு பொருட்களை உண்ணும் அவலம்

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மிகவும் நலிவுற்ற நிலையில் வாழும் பழங்குடியின குழந்தைகள் குப்பையிலிருந்து உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டின் எல்லைப்பகுதியான ஒரு நகரில் கொலம்பியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் திங்கட்கிழமை அந்த பகுதிக்கு சென்ற லாரி ஒன்று குப்பைகளை கொட்டி கொண்டிருந்தபோது பழங்குடியின சிறுவன் அங்கு சென்று குப்பை கழிவுகளை பிரித்து அதில் இருந்த அழகிய வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டான். அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த வீடியோ பதிவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்று இருக்கும் பழங்குடியின மக்களுக்கு விரைவில் உதவிகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கொலம்பியாவில் வாழும் 30 சதவீத பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய இருப்பதாகவும் அவர்களில் 70 சதவீதம் குழந்தைகள் ஊட்டச் சத்து பற்றாக்குறையால் வருவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply