தேர்ச்சிபெறாத மாணவர்கள் பழைய பாடத்திலேயே தேர்வு எழுதலாம்

கடந்த கல்வி ஆண்டு களில் தேர்ச்சியடையாத 11 மற்றும் 12 பத்தாம் வகுப்பு மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி விடுத்துள்ள அறிக்கையில் பழைய பாடத்திட்டத்தில் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..

பொதுத்தேர்வில் கடந்த ஆண்டுகளில் தேர்ச்சிபெறாத 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் தேர்ச்சி பெறாத 11, 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply