சென்னையில் மாநில அளவிலான காவல் பணி திறன் போட்டி! வென்றவர்களுக்கு பதக்கம்!

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான காவல் பணி திறன் போட்டி – 2019, கடந்த 23.09.2019 -ம் தேதி முதல் 27.09.2019 -ம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ராதா குற்றப்புலனாய்வு, சட்டம், நீதிமன்ற தீர்ப்பு ஆகிய தேர்வுகளில் கலந்து கொண்டு மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், கேணிக்கரை காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் ஹேமா, WHC 563 அவர்கள் கணினி விழிப்புணர்வு (Computer Awareness) என்ற போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இது தொடர்பாக ரூபேஷ் குமார் மீணா, இ.கா.ப., காவல் துறை துணை தலைவர், இராமநாதபுரம் சரகம் மற்றும் ஓம்பிரகாஷ் மீணா, இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், இராமநாதபுரம் பதக்கம் வென்றவர்களை பாராட்டினர்.


Leave a Reply