செஞ்சி அருகே வாகனத்தில் ஏற்றிச் சென்ற பட்டாசுகள் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனமொன்று திண்டிவனத்தில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு சென்று நோக்கி சென்று கொண்டிருந்தது கடலூர் அருகே சென்று கொண்டிருந்தபோது வாகனத்தில் இருந்து கரும்புகை வந்தநிலையில் அதில் சென்ற மூன்று பேரும் இறங்கி பார்த்துள்ளனர்.
புகை இருந்த இடத்தில் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வாகனம் வெடித்து சிதறியுள்ளது. இதில் வாகனத்தில் வந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகிலிருந்த கட்டிடத்தில் சேதம் ஏற்பட அங்கிருந்த ஒருவரும் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். மேலும் அப்பகுதியில் இருந்த 8 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் .
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் காவல்துறையினரும் இரண்டு மூன்று பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த 8 மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.