கோயிலைத் திறக்கச் சென்று திடீரென அருள் வந்து சாமி ஆடிய தாசில்தார்

ராமநாதபுரம் அருகே கோவிலை திறக்க சென்று தாசில்தார் திடீரென அருள் வந்து சாமி ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மேலக்கிடாரம் கிராமத்தில் பழமையான அய்யனார் கோவில் உள்ளது. இது தரப்பினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக கடந்த பத்து வருடங்களாக இந்த கோவில் திறக்கப்படாமல் இருந்தது.

 

இந்த நிலையில் கோவிலை திறந்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யுமாறு தாசில்தார் மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து கடலாடி தாசில்தார் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகள் கோவிலை திறந்தனர். அப்போது திடீரென தாசில்தார் முத்துக்குமார் அருள் வந்து சாமி ஆடினார். இதனை பார்த்து அங்கிருந்த பெண்களும் சாமி வந்து ஆடினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply