லட்சுமியாக பெண் குழந்தைகளை கொண்டாடுங்கள்
இந்தியாவின் லக்ஷ்மிகளாக பெண் குழந்தைகளை போற்றி கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிய பிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் வானொலி மூலம் உரையாற்றினார். அது 90வது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் நேரம் வந்திருப்பதாக குறிப்பிட்ட மோடி பெண் குழந்தைகளை நாட்டில் லக்ஷ்மிகளாக கொண்ட புதிய முயற்சியை தொடங்க அழைப்பு விடுத்தார். பெண்களின் ஆற்றலை, வலிமையை நவராத்திரி பண்டிகை காலங்களில் போற்றுவோம் என்றார். தேர்வு விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு அனுபவங்களை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.இ சிகரெட் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி இதுகுறித்த விழிப்புணர்வு நாட்டு மக்களுக்கு தேவை என தெரிவித்தார்.
தேசப்பிதா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவின் போது நெகிழி உபயோகித்தலை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசுகள் யாருக்கும் எந்த இன்னலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர் நாட்டு மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




