காவல்துறைக்கு தொழில்நுட்பங்கள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல்

தமிழக காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அம்பலமாகியுள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே வாக்கி டாக்கி வாங்கியதில் 88 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விவகாரத்தை அதிமுக அரசு மூடிமறைத்தது. அதன் தொடர்ச்சியாக இந்த மெகா ஊழல் நடந்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறைக்கு கேமரா சிசிடிவி, டிஜிட்டல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட உபகரணங்கள் வாங்குவதில் கூட 350 கோடி ரூபாய் ஊழல் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருபக்கம் பாகனை பற்றாக்குறையால் புலனாய்வுப் பணிகள் தவித்து நிற்கும் சூழலில் காவல்துறை நவீன மயமாக்கல் ஒதுக்கப்படும் நிதியில் இவ்வளவு பெரிய ஊழல் நிகழ்ந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே காவல்துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலை ஆவது லஞ்ச ஊழல் தடுப்பு துறை நியாயமாக விசாரித்து உண்மை குற்றவாளிகள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் துறையிலேயே இந்த ஊழல் நடைபெற்றுள்ளது என்பதால் சுதந்திரமாக விசாரணை நடத்தி ஊழல் பெருச்சாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Leave a Reply