மோடி, அமித்ஷா உயிருடன் இருப்பதை சோனியா குடும்பம் விரும்பவில்லை – ராம்தேவ்

பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உயிருடன் இருப்பதை சோனியாகாந்தி குடும்பத்தினர் விரும்பவில்லை என பாபா ராம்தேவ் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகாரத்தில் இருந்த காலத்தில் சோனியாகாந்தி குடும்பத்தினர் மோடியும் அமித் ஷாவும் உயிருடன் இருப்பதை விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

தற்போது மோடியும் அமித் ஷாவும் அதற்கு பழிவாங்க நினைத்து இருந்தால் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் எங்கு இருந்திருப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார். அமைச்சரவை ஒருமுறை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் சதித் திட்டம் மூலம் சிறையில் தள்ளியதாகவும் அமைச்சரால் தன்னை தொந்தரவு செய்யவோ அல்லது அவமதிக்கவோ முடியுமென ப சிதம்பரம் ஒருபோதும் நினைத்ததில்லை என்று அவர் கூறினார்.

அதன் பலனை சிதம்பரம் அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மோடியை தூக்கில். இட சிதம்பரம் சதித்திட்டம் தீட்டியதாக அவர் குற்றம்சாட்டினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி ராஜா பாபா ராம்தேவ் இடம் உறுதியான ஆதாரங்கள் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் தவிர பொது இடங்களில் இது போல் பேசுவது முறையற்றது என்று கூறியுள்ளார்.


Leave a Reply