--- --:--:-- --

அதிமுகவின் வெற்றிக்காக பாமக பாடுபடும் : அன்புமணி ராமதாஸ்

download (4)

விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக பாமக பாடுபடும் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அடுத்த பட்டான் ஊரில் பாமகவின் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

 

இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் மரக்காணம் முதல் புதுக்கோட்டை வரையிலான இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தினார். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon