--- --:--:-- --

சேலத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை

download (2)

சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 110 பேர் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 15 பேர் டெங்கு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 

காய்ச்சல் வந்தவுடன் ஊசிபோடும் முறையை தவிர்க்க வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் சேலம் அரசு மருத்துவமனை கல்லூரி நீட் தேர்வு மூலம் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்பட்ட 100 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது எந்த தவறும் நடைபெறவில்லை என தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon