ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு காரணமா?
திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதே கருத்தை டி.டி.வி தினகரன், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது.
நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான்.
தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில்,ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் “சோப்பு, ஷாம்புகள்தான் காரணம்” விஞ்ஞானமே வியக்கும் அமைச்சரின் வினோத விளக்கம்.திருப்பூர் மாவட்டம், காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர், ஆறுகளில் நுரை பொங்குவதற்குச் சோப்பு, ஷாம்பு பயன்பாடுகள்தான் காரணம் என விஞ்ஞானமே வியக்கும் வினோதமான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
அரசியல் விபத்தால் முதலமைச்சரான ஜோசப் விஜய் அவர்களின் அமைச்சரவையில், தனக்கு ஒதுக்கப்பட்ட துறையின் பெயரையே தெரியாமல் சில காலம் குழம்பிய அமைச்சர், தற்போது தனது துறை சார்ந்த பிரச்சினைகள் குறித்துப் பேசுவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதா? அல்லது ஆறுகளில் மாசு ஏற்பட்டு நுரை பொங்குவதற்கும் எதிர்க்கட்சிகளின் சதிதான் காரணம் எனக் கூறாமல் விட்டு விட்டாரே என்று மகிழ்ச்சியடைவதா? என்று தெரியவில்லை.
மேலும் ஆறுகளில் நுரை பொங்குவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து, கழிவுகள் கலக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய அமைச்சர், பிரச்சினையின் தீவிரத்தை உணராமல் இத்தகைய விளக்கங்களை அளிப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்த அரசு எந்த அளவிற்கு அக்கறையுடன் செயல்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
காற்று வீசாததால் காற்றாலைகள் சுழலவில்லை; அதனால்தான் மின்தட்டுப்பாடு ஏற்பட்டது எனக் கூறிய எரிசக்தித் துறை அமைச்சர், டெங்குவிலிருந்து பாதுகாப்பாக இருக்க முழுக்கைச் சட்டை அணிய வேண்டும் என
📱 Share on WhatsApp 𝕏 Share on X




