சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை பத்துக்கும் மேற்பட்டோர் செம்மரங்களை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களை தடுத்த போது போலீசார் மீது கற்களை வீசி தாக்க முயன்றனர்.
இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் செம்மரங்களை அங்கேயே போட்டு விட்டு அனைவரும் தப்பியோடிய நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர்கள் விட்டுச் சென்ற 6 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மீது கற்களை வீசி தாக்கியதால் தற்காப்பு கருவி வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
மேலும் செய்திகள் :
தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி தேர்வு..!
மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து..!
உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!
5,000 பெண்களுக்கு நலத்திட்ட உதவி.. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் கொடுத்த சர்ப்ரைஸ்..!
கரையை கடந்த மிக்ஜாம் புயல்.. ஆந்திராவின் நிலைமை என்ன..?