காலாவதி தேதி முடியாத 5 ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காலாவதி தேதி முடிவடையாத பைவ் ஸ்டார் சாக்லேட்டில் புழுக்கள் இருந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் இயங்கிவரும் கடை ஒன்றில் அதே பகுதியை சேர்ந்த குழந்தைகள் சிலர் பை ஸ்டார் வாங்கியுள்ளனர். வீட்டிற்கு சென்று பிரித்தபோது அதில் ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

சாக்லேட்டை வாங்கிய கடைக்காரரிடம் குழந்தைகள் பெற்றோர் சென்று இது குறித்து கேட்டுள்ளனர். ராசிபுரத்தில் சேர்ந்த மொத்த விற்பனையாளர்கள் ஆன கிருஷ்ணா ஏஜென்சியில் இருந்து அந்த செயலை தங்கள் வாங்கியதாகவும் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கடைக்காரர் கூறியதாக தெரிகிறது.

 

ஜனவரி மாதம் 29 என்று ஒன்பது மாதத்திற்குள் அதை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் சாக்லேட் காலாவதியாக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் புழுக்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply