திருநங்கையாக மாறியதால் பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பிடெக் படித்து விட்டு சிங்கப்பூரில் பணி புரிந்து வந்தார். அங்கிருந்தபடியே தமது பெற்றோருக்கு தேவையான பல உதவிகளை செய்து வந்தார்.இந்த நிலையில் தமது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த அவர் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி உள்ளார்.
மேலும் தமது பெயரை சீமாச்சி என என மாற்றிக் கொண்டார். அண்மையில் சொந்த ஊர் திரும்பிய அவரை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் திருநங்கையாக மாறி அவரை தற்கொலை செய்து கொள்ளுமாறு கூறி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சீமாச்சி புகார் அளித்துள்ளார். தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






