--- --:--:-- --

பாலத்தின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளான லாரி மீட்பு

Capture

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான லாரி கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. புலியூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி இரும்பு தண்டவாளங்கள் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் பக்கத்தில் சுவற்றில் மோதி 50 அடி ஆழத்தில் விழாமல் தொங்கிக்கொண்டிருந்தது. விழாமல் இருந்ததால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மூன்று பெண்களின் உதவியுடன் பாலத்தில் தொங்கிய லாரியை மீட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து நான்கு மணி நேரத்திற்குப் பின்பு சீர் செய்யப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon