சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஜூஸ் கடை உரிமையாளர் கைது

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஜூஸ் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூஸ் கடை நடத்தி வருபவர் முகமது இவன் தனது கடைக் அருகே வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை சில மாதங்களுக்கு முன்பு மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படவே குடும்பத்தினர் மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கர்ப்பத்திற்கு காரணமான ஜூஸ் கடை உரிமையாளர் மீது திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பின்னர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Leave a Reply