இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், கூடுதல் ஆட்சியராக மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., பொறுப்பேற்பு

இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை புதிய திட்ட இயக்குநர், கூடுதல் ஆட்சியராக மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., இன்று (25.9.2019) பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், கூடுதல் ஆட்சியராக மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., தெரிவிக்கையில்: இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முறை சார்ந்த அனைத்து திட்டங்களை தொய்வின்றி உடனுக்குடன் மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப்படும்.

 

நீர் மேலாண் மற்றும் சுற்றுப்புறத் தூய்மை பணிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில் பசுமையை மேம்படுத்தும் வகையில் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து பெருமளவு மரக்கன்றுகள் நடும் இயக்கம் செயல்படுத்தப்படும். பொதுமக்களும் தங்களது சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்திட முன்வர வேண்டும்.

 

வளர்ச்சி திட்டங்கள் சார்ந்த குறைகளை விரைவில் தீர்க்க பொதுமக்கள் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.


Leave a Reply