--- --:--:-- --

குடியரசுத் துணைத் தலைவர் வருகை: சென்னையில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

7

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை வருகையையொட்டி, நகரில் 2 நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 21) பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக மற்றும் வணிக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதன்படி தாம்பரத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் திருநீர்மலை சந்திப்பில் திரும்பி குன்றத்தூர் சாலை வழியாகவும், பல்லாவரத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் விமான நிலைய சந்திப்பில் திருப்பப்பட்டு தாம்பரம் நோக்கியும் செல்லலாம்.

 

 

மேலும், போரூரில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் கத்திப்பாராவில் திருப்பி விடப்பட்டு வடபழனி வழியாகச் செல்ல வேண்டும் என்றும், நாளை (நவம்பர் 22) காலை 8 மணி முதல் 10.30 மணி வரை அடையாறு – பாரிஸ் கார்னர் மற்றும் பாரிஸ் கார்னர் – அடையாறு வழித்தடங்களில் வரும் கனரக வாகனங்கள் முறையே கிரீன்வேஸ் சந்திப்பு மற்றும் உழைப்பாளர் சிலை பகுதியில் திருப்பி விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon