டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னையை அடுத்த மாங்காட்டில் சேர்ந்த 12 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கிருத்திகா என்ற மாணவி பிற்பகலில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.

 

12 வயதான சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 5 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காய்ச்சல் அதிகரித்து மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் சிறுமி உயிரிழந்தார். இது பெற்றோரிடையே மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.


Leave a Reply