மாணவர்களின் ஆசைப்படி விமானத்தில் பறக்க வைத்த தனியார் அமைப்பு

படிப்பில் சிறந்து விளங்கிய வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையை தனியார் அமைப்பு ஒன்று நிறைவேற்றியுள்ளது. படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை மாணவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக நிறுவனம் சேவையாற்றி வருகிறது. இதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ரத்தின விலாஸ் பள்ளியில் படிப்பில் ஏழை மாணவர்களின் ஆசைகளை தனியார் அமைப்பு கேட்டறிந்தது.

 

விமானத்தில் பறக்க ஆசைப்பட்டதையடுத்து மாணவர்களை சிவகாசியில் இருந்து மதுரை அழைத்து வந்த தனியார் அமைப்பினர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள் தங்களது பயண அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். சென்னையை சுற்றி வரும் மாணவ-மாணவிகள் பொழுதுபோக்கு பூங்காவில் தங்களது பொழுதை கழித்தனர்.

 

பின்னர் சென்னையிலிருந்து மதுரைக்கு அழைத்து செல்லப்படும் மாணவ மாணவிகள் சிவகாசிக்கு திரும்ப உள்ளனர். இதில் இந்தியா லேடீஸ் ஏர் இந்தியா நிறுவனம் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் 6000 வகுப்பறைகள் கட்டித் தந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply