கும்பகோணம் பகுதியில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் தனியார் விடுதியில் தங்கி பணியாற்றி வந்த சூர்யா, தமிழ் செல்வன், பார்த்திபன் ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து ரத்த பரிசோதனை செய்துள்ளனர்.
அதில் அவர்களுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி தென்பட்டது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இதனை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய மூவர் உட்பட மேலும் இருவருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.