மாற்றத்தை உருவாக்குபவர் விருது நடிகர் விவேக்கு வழங்கப்பட்டது
வி ஜி எம் மருத்துவமனையின் சார்பாக மாற்றத்தை உருவாக்குபவர் விருது நடிகர் விவேக்கு வழங்கப்பட்டது.
கோவை இராமநாதபுரம் பகுதியில் வி ஜி எம் மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளாக காஸ்ட்ரோ துறையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், வி ஜி எம் பவுண்டேஷன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக செயற்பாட்டாளர்களையும், மனிதநேயமிக்க மருத்துவர்களின் பணிகளை பாராட்டி விருதுகளை வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பசுமை கலாம் அமைப்பின் மூலம் ஒரு கோடி மரங்கன்றுகளை நடும் பொருட்டு அதற்கான பணியில் ஈடுபட்டு வரும் நடிகர் விவேக்கிற்கு சமுதாய மாற்றத்திற்கான விருது வழங்கப்பட்டது. முன்னாள் காவல் துறைத்தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் விவேக் வி ஜி எம் பவுண்டேஷன் சார்பாக மாநகரத்தின் முக்கிய பகுதிகளில் வனத்தை உருவாக்கி வருவதாகவும், நீர், நிலைகளை மேம்படுத்த குளங்கள் தூர் வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஒரு கோடி மரங்களை நடுவதன் முயற்சியாக தற்போது வரை 33 லட்சத்தி 23 ஆயிரம் மரங்கள் நடப்பட்டு விட்டதாகவும்,தனது லட்சியத்தை நோக்கிச்செல்ல தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன் வந்தால் தனது பணி சிறப்பாக அமையும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




