தேனி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியைச் சீரழித்த காமுகன்

தேனி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரண்மனை புதூர் அருகே உள்ள தன்வந்திரி வைத்தியசாலையின் வாழ்வியல் மறுவாழ்வு மையத்தின் மனநலம் பாதிக்கப்பட்ட 15 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

 

ஏழு வயது கொண்ட சிறுமி கடந்த நான்காண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 19ம் தேதி வீட்டுக்கு வந்த அந்த சிறுமியின் உடலில் காயம் இருந்ததை கண்ட பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது சிறுமி பாலியல் தொந்தரவிற்கு ஆளானது தெரியவந்தது. இதனையடுத்து மறுவாழ்வு மையம் நடத்தி வந்த சரவணன் என்கிறவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்த புகாரில் போலீசார் கண்டுகொள்ளாததால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதன் காரணமாக மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறுதியில் சிறுமியை சீரழித்த சரவணன் மீது புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.


Leave a Reply