சிறுமியை தாக்கிய டியூஷன் ஆசிரியை கைது!

கன்னியாகுமரி மாவட்டம் பெதெல்புரம் அருகே ஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். காயங்களுடன் 5 வயது மதிக்கத்தக்க மாணவி புகைப்படம் ஒன்று நியாயம் கிடைக்கும் வரை பகிருங்கள் என்ற அடைமொழியுடன் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் பெதெல்புரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

அந்த புகைப்படம் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியை கண்டறிந்த காவல்துறையினர் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். புகைப்படத்தில் இருக்கும் மாணவி ஒன்றாம் வகுப்பு படித்து வருவதாகவும் காலாண்டுதேர்வு போது மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்த ஆசிரியர்கள் அதுகுறித்து மாணவியிடம் கேட்டதற்கு டியூஷன் ஆசிரியர் என்பவர் மற்றும் பிரம்பால் அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜெசிமா காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply