அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவியர் பங்கேற்ற சைக்கிள் விளையாட்டு போட்டி

இராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக
மாணவ, மாணவியர் பங்கேற்ற சைக்கிள் விளையாட்டு போட்டி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, (செப்.15) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.

அதன் படி, இராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் சாலை முன் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் வீர ராகவ ராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விளையாட்டு போட்டியானது 13 வயதிற்குட்பட்டோர் (10கி.மீ), 15 வயதிற்குட்பட்டோர் (15கி.மீ), 17 வயதிற்குட்பட்டோர் (20கி.மீ) என 3 பிரிவுகளாக மாணவர், மாணவியர் என இரு பாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டன.

இப்போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசு,சான்றிதழ் வழங்கினார்.காவல் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட விரைவு மிதிவண்டி கழக தலைவர் பால்பாண்டியன், மாநில துணைத் தலைவர் ஜான்சன் கலைச்செல்வன், இராமநாதபுரம் வட்டாட்சியர் தமிழ்செல்வி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply