உச்சநீதிமன்றத்திற்கு நிரந்தரமான 5 நீதிபதிகள் அமர்வு நியமனம்

உச்சநீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் அடங்கிய நிரந்தர அரசியல் சாசன அமர்வு நியமனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் நிரந்தரமான அரசியல் சாசன அமர்வு நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து இந்த புதிய அமர்வு வழக்குகளை விசாரணை செய்யும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். சுமார் 60 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

37 முக்கிய வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக 4 புதிய நீதிபதிகள் வரும் திங்கட்கிழமை பதவி ஏற்க உள்ளனர். இதனால் உச்சநீதிமன்றத்திற்கு மூலம் கிடைக்கும் தரமான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு செயல்படும் 20 முதல் 25 நீதிபதிகள் வரை முக்கிய அரசியல் சட்டம் தொடர்பான முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நிலையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு களும் இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Leave a Reply