மாணவனை வாளியால் தாக்கிய ட்யூஷன் ஆசிரியை மீது புகார்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனை இரும்பு வாளியால் ட்யூஷன் ஆசிரியை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது பள்ளிவிலை பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர். இவரது இரண்டாவது மகனான முகமது. அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவரிடம் டியூஷன் பயின்று வந்தார். சம்பவத்தன்று வழக்கம்போல டியூசன் சென்ற முகமது தலையில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனே முகம் அதை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தற்போது முகமது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சக மாணவியின் நோட்டு புத்தகத்தை எடுத்ததாக கூறி ஆசிரியை சரண்யா வாளியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதில் தனது மகன் காயமடைந்ததாக கவலையுடன் தெரிவிக்கிறார் மாணவனின் தந்தை. மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் டியூஷன் ஆசிரியை சரண்யா மீது வடசேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது தலைமறைவாகியுள்ள சரண்யாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Leave a Reply