ஈராக்கில் பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வெடித்து தகர்க்கப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர் இராக்கின் தென்பகுதியில் உள்ள கர்பாலா நகருக்கு பேருந்தில் சென்றிருந்தபோது ராணுவ சுங்கச்சாவடி அருகே சென்ற போது திடீரென வெடித்து தீப்பற்றியது. இந்த தாக்குதலில் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் பேருந்தில் பயணித்த ஒருவர் தான் வைத்திருந்த வெடிகுண்டு நிரம்பிய பையை பேருந்து சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு அதிலிருந்து இறங்கி வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் தற்போது அவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஈராக்கில் இந்த மாதம் மொகரம் மற்றும் புனித மாதம் என்பதால் ஈராக் மற்றும் உலக நாடுகளிலிருந்து ஷியர் முஸ்லிம்கள் ஈராக் நகருக்கு வந்து செல்வார். தற்போது இந்த நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் இதுபோன்ற தாக்குதல் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.